×

சோனியா காந்தி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி எம்பியின் 77வது பிறந்த நாள் விழா, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித்ஆண்டனி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல், டாக்டர் தகி, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், அர்னால்டு ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் தளபதி ரகமத்துல்லா வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

The post சோனியா காந்தி பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Krishnagiri ,Congress ,BSNL ,Londonpet ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....