×

மிகப்பெரிய பாதிப்புதான் சென்னையைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியவில்லை: சரத்குமார் பேட்டி

புதுக்கோட்டை: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று காலை சமக தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னையில் பெருமழை மற்றும் வெள்ளப் பாதிப்பு, மிகப்பெரிய பாதிப்புதான். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல மாநிலங்கள் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியவில்லை என்றாலும் நிறைவாக இல்லை.

நான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், தொலைத் தொடர்பு வசதியில்லாததால் செய்ய முடியவில்லை. இனிமேல் இதுபோன்ற வெள்ள பாதிப்பு நிலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மக்களை உடனே சந்திப்பதற்கும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் எந்தக் கட்டமைப்பையும் நாம் உருவாக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறை சொல்லும்படி இல்லை ’’ என்றார்.

 

The post மிகப்பெரிய பாதிப்புதான் சென்னையைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியவில்லை: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sarathkumar ,Pudukkottai ,Tuticorin airport ,Samaka ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....