×

காங். முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாள்: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவரும், கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியாகாந்தி நேற்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காங். முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாள்: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kong ,Former ,President ,Sonia ,PM Modi ,New Delhi ,Congress Parliamentary Party ,former president ,Sonia Gandhi ,Twitter ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...