×

எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை செயலாளர், மாசுக் கட்டுப்பாடு வாரியம், நீர்வளத்துறை, சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு குறித்து வரும் திங்கட்கிழமை ஆய்வு செய்து செவ்வாய்க் கிழமை அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை டிசம்பர் 12-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

The post எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,Government of Tamil Nadu ,Ernavur ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்...