×

சென்னையில் புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

உடன்குடி, டிச. 9: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மீட்பு பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த மழையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட எழில்நகர், தொப்பை விநாயகர் கோயில்நகர், தமிழன்நகர், நெடுஞ்செழியன்நகர், எண்ணூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மீன் வளம்- மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் தண்ணீர் வெளியேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் நந்தகுமார், எபனேசர், மாவட்ட செயலாளர் இளையஅருணா, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் மண்டல சேர்மன், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rescue Minister ,Anita Radhakrishnan ,Chennai ,Udengudi ,Minister ,Cyclone Mikjam ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...