×

செங்கோட்டை நகராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 19 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு

செங்கோட்டை,டிச.9: செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ. 3 இடத்திலும், ராமலெட்சுமி, இசக்கி துரை என்ற சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் 2-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி நகர்மன்ற தலைவராக உள்ளார். நகர்மன்ற தலைவர் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், செங்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அரசின் சாதனை திட்டங்களை கிடப்பில் போட்டதாகவும் மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2 கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய கோரம் இல்லாததால் நகர்மன்ற கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று நண்பகல் இரு பிரிவாக செங்கோட்டையில் 19 கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி செங்கோட்டை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். 24 வார்டுகளை உள்ளடக்கிய செங்கோட்டை நகராட்சியில் 19வது வார்டு உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கோரி மனு அளித்தனர்.

The post செங்கோட்டை நகராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 19 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Senkot ,Sengkot ,Sengkot Municipality ,M. K. ,Congress ,A. Thu ,Sengkot Municipal ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் கார் வாங்குவதாக மோசடி செய்தவர் கைது