×

பிளவக்கல் அணை திறப்பால் 15 கண்மாய்கள் 100% நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

 

வத்திராயிருப்பு, டிச.9: வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் குறைந்தாலும் சுமார் 15 கண்மாய்கள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. இதனால் பாசன வசதிக்காக தண்ணீரானது அணையில் இருந்து திறக்கப்பட்டது. பிளவக்கல் பெரியாறு அணையை நம்பி சுமார் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து 27 அடியாக உள்ளது. ஒரு புறம் பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் குறைந்தாலும் மறுபுறம் 40 கண்மாய்களில் 15 கண்மாய்கள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், இந்த அணையை நம்பி உள்ள கடைசி கண்மாயான பானாங்குளம் கண்மாயும் முழு கொள்ளளவை எட்டி வருவதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பிளவக்கல் அணை திறப்பால் 15 கண்மாய்கள் 100% நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Plavakal dam ,Vattarayiru ,Vattarayiru Palavakal Periyar Dam ,
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு