×

உழவன் செயலி மூலம் இடுபொருட்கள் பெறும் வழி வேளாண் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம்

 

அரவக்குறிச்சி, டிச.9: உழவன் செயலி மூலம் இடுபொருட்கள் பெறுவது பற்றி வேளாண் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மொடக்கூர் (மேல்) ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான பயிற்சி நடந்தது.

இந்த வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான பயிற்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி திட்ட விளக்க உரைகள் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். துணை வேளாண்மை அலுவலர் மாணிக்கவாசகம், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், தார்பாலின், நிலமில்லா விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள், ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 தென்னை கன்றுகள் வழங்கப்பட்டது.
மேலும் உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவு பற்றி செயல் விளக்கம் அளித்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன. நிறைவாக உதவி வேளாண்மை அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

The post உழவன் செயலி மூலம் இடுபொருட்கள் பெறும் வழி வேளாண் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Aravakurichi… ,
× RELATED கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது