×

கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

 

கொள்ளிடம்,டிச.9: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் கொள்ளிடம் வட்டார கிளையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் வரவேற்றார். சங்க கொடியினை முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். வட்டார செயலாளர் ராஜேஷ் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் சிங்காரவேலு மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் நாகராஜன் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொள்ளிடத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். கொள்ளிடம் வட்டாரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா அலுவலகம் உருவாக்க வேண்டும். 27 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சுமார் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொள்ளிடம் வட்டார புதிய செயலாளராக ஸ்ரீதர், தலைவராக சாமியப்பன் பொருளாளராக பிரஷ்னேவ் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

The post கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kollid ,Kollidum ,Tamil Nadu Rural Development Department Officers' Association ,Kollidum, Mayiladuthurai district ,Kollidum Rural Development Department ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது