×

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடந்தால் புகார் அளிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

 

பெரம்பலூர்,டிச.9: குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்று செங்குணம் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் சப்.இன்ஸ்பெக்டர் பழனிவேல் கூறினார். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நேற்று மருவத்தூர் காவல்நிலைய சப்.இன்ஸ்பெக்டர் பழனிவேல், தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில், பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமைகள் குறித்தும், காவல்உதவி எண் 100 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பெண்களுக்குப் பிரச்னை என்றால் 181 எண்ணைத் தொடர்பு கொள்ளவேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும் தாத்தா பாட்டியிடம், அன்பாகப் பேசவேண்டும். உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெற வாய்ப்பு இருந்தால், நடைபெற்றால் 1098 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். கல்வியின் சிறப்பை உணர்ந்து வாழ்வில் முன்னேற நன்கு படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடந்தால் புகார் அளிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...