×

பொன்னமராவதி அருகே நல்லூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி அருகே நல்லூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நல்லூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சித்தலைவர் ராமையா தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவர்கள் சண்முகநாதன், பிரேம்குமார், கால்நடை ஆய்வாளர்கள் தயானந்தராவ், மற்றும் கால்நடைஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சைஅளித்தல், செயற்கைமுறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்,சினை பரிசோதனை செய்தல், மலடுநீக்கம் செய்தல், சினை ஊசி போடுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்றவை செய்தனர். பின்னர் மூன்று சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கினர். சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post பொன்னமராவதி அருகே நல்லூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Livestock Health Awareness Camp ,Nallur ,Ponnamaravati ,Tamil Nadu Government ,Awareness Camp ,Dinakaran ,
× RELATED நல்லூரில் புதியதாக கட்டிய திமுக...