×

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்

 

தஞ்சாவூர்,டிச.9: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிற்கும் இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மழை, வெயிலில் கிடந்து சேதமடைகின்றன. இதை தடுக்க இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு கோரக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வல்லம் செல்லும் வழியில் உள்ளது. அந்த அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இயங்கி வருகிறது.

மேலும் அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணிக்கு வருபவர்கள் அவர்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருபவர்கள், அங்கு பணியாற்றுவார்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் வெயிலிலும் மழையிலும் வெளியே நிறுத்தப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து இரு சக்கர வாகனங்களை மட்டும் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்காவில் ஏற்கனவே ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. அந்த நீச்சல் குளம் பராமரிக்கப்படவில்லை. இப்போதும் அது தண்ணீரின்றி காட்சியளிக்கிறது.

The post தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur District Collector ,Thanjavur ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை