×

சில்லிபாயின்ட்…


* கான்பெராவில் பாகிஸ்தான் அணியுடன் நடந்து வரும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில், ஆஸி. பிரதமர் லெவன் அணி 3ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன் குவித்துள்ளது. பேங்க்ராப்ட் 53, மார்கஸ் ஹாரிஸ் 49, கேமரான் கிரீன் 46, கேப்டன் மெக்ஸ்வீனி 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரென்ஷா 136 ரன், வெப்ஸ்டர் 21 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷான் மசூத் 201* ரன், பாபர் 40, சர்பராஸ் 41, அப்துல்லா 38 ரன் எடுத்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

* ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் பெர்த்தில் டிச.14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது காயம் காரணமாக அந்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அப்ரார் அகமது, நோமன் அலி என 2 ஸ்பின்னர்கள் மட்டுமே பாக். அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கவுன்டி கிளப் போட்டிகளில் விளையாடியபோது ஸ்பாட் ஃபிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய நியூசி. முன்னாள் நட்சத்திரம் லூ வின்சென்ட்டுக்கு (45 வயது) விதிக்கப்பட்ட ஆயுள் தடையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இனி அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட, பயிற்சியாளர் அல்லது வர்ணனையாளராக செயல்பட அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

* ஐபிஎல் தொடரில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் மேம்பாட்டு தலைவராக முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2014-2016 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஐசிசி யு-19 உலக கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாக டேவிட் டீகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற இருந்த இத்தொடர், தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது (ஜன. 13 – பிப். 14).

* ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில், பெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Canberra ,Aussies ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா