×

மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் அநீதியை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு :சு.வெங்கடேசன்

சென்னை : மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது
எம் பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்,”எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் அநீதியை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு :சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Magua Moitra ,Modi government ,S. Venkatesan ,Chennai ,Madurai ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...