×

பேருந்துகள் மோதி விபத்து; 10 கல்லூரி மாணவிகள் காயம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பேருந்துகள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கு இன்று காலை திருப்பூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு அக்கல்லூரி பேருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியாயிபாளையம் அருகே செல்லும் போது முன்னால் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது.

இதில் கல்லூரி பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்து. விபத்தில் கல்லூரி பேருந்தில் சென்ற 10 மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு திரண்ட பொதுமக்கள் ஊத்துகுளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அங்கு வந்த ஆம்புலன்சில் காயமடைந்த மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பேருந்துகள் மோதி விபத்து; 10 கல்லூரி மாணவிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே வேலம்பட்டியில்...