×

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க முன்வந்துள்ளது TVS நிறுவனம்..!!

சென்னை: மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க TVS நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகின்றனர். ஆனால் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்களும், கார்களும் அதிகமான அளவில் சேதமடைந்துள்ளன. இந்த சூழலில் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் ஆடி, ஹூண்டாய் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மாருதி சுசூகி நிறுவனம், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்கள், சிறப்பு சர்வீஸ் முகாம் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு அறிவிப்பை டிவிஎஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் இருசக்கர வாகனங்களை அருகே உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை வெள்ளத்தில் சேதமான இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது. பழுதுபார்க்கும் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் முழுமையாக பரிசோதிக்கப்படும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், என்ஜின் சேதாரத்தை தவிர்க்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனத்தை எக்காரணம் கொண்டு ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் அறிவுறுத்தியுள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு.. மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க முன்வந்துள்ளது TVS நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Mijam ,TVS ,CHENNAI ,
× RELATED கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது...