×

பலாத்கார குற்றவாளிகளுக்கு ‘அய்யோ போச்சே’ தண்டனை: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு குற்றவியல் சட்ட திருத்த மசோதா, நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் தண்டனை சட்டம் 1860, மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் இம்ரான்கான், ‘பாலியல் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற அனுமதியுடன், ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும். அதற்கு இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது,’ என்று கூறினார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இதற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்பி.க்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘இது இஸ்லாத்துக்கு எதிரானது,’ என்று கூறியுள்ளனர். இந்த புதிய சட்டத்தின் மூலம், பாலியல் குற்றவாளி என்று அறிவிக்கப்படுபவருக்கு, தனது வாழ்நாளில் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத வகையில் அவருடைய விதைப்பை, ரசாயனங்களை பயன்படுத்தி அழிக்கப்படும். …

The post பலாத்கார குற்றவாளிகளுக்கு ‘அய்யோ போச்சே’ தண்டனை: பாகிஸ்தானில் அதிரடி சட்டம் appeared first on Dinakaran.

Tags : Islamabad ,Pakistan ,Boche ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா