×

பெரம்பலூரில் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர், டிச.8: பெரம்பலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடி மக்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் டிஆர்ஓ வடிவேல் பிரபு பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடி மக்களுக்கான உரிமைகள் மற்றும் பாது காப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (7ம் தேதி) நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டவருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தங்களது சொத்து பிரச்சனைகளுக்கான தீர்வை சட்ட முறைப்படி அணுகுவது குறித்தும், பெற்றோர்களை பாதுகாத்து பராமரிக்காத பிள்ளைகளுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்த சொத் துக்களை ரத்து செய்ய உரிமை உண்டு என்பது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கான சட்டங்கள் அவர்களுக்கான உரிமைகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூத்த வழக்கறிஞர் சிராஜுதின் விளக்கிக் கூறினார்.

பின்னர் உடல் நலனை பேணிக்காப்பது சுகாதாரம் குறித்து, பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் அசோக் மூத்தகுடி மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக் கான இலவச உதவி எண் 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இக்கூட்ட த்தில் ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட சமூக நலவலர் ரவி பாலா, பெரம் பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பிதங்கவேலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்திய பாலகங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Social welfare and women's rights ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...