×

சோழவரம் ஏரியின் சேதமடைந்த தடுப்பு சுவர்; சீரமைப்பு பணிகள்

 

புழல்: சோழவரம் ஏரியின் சேதமடைந்த தடுப்பு சுவர்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது சோழவரம் ஏரி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் நேற்று தண்ணீர் இருப்பு 1,003 மில்லியன் கன அடியாக இருந்தது. நீர்வரத்து 2,309 கன அடியாக உள்ளது. 2,400 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஏரியின் மதகு அருகே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரையின் தடுப்பு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் சோழவரம் ஏரி கரைக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஏரிக்கரையின் தடுப்பு சுவர்கள் விரிசல் ஏற்பட்டதை தடுக்கின்ற வகையில் செம்மண் கொட்டி, மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post சோழவரம் ஏரியின் சேதமடைந்த தடுப்பு சுவர்; சீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Cholavaram Lake ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!