×

பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நாகர்கோவில்: லையோர பகுதிகளில் மழை குறைந்ததால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 512 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.22 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 786 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 510 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-1 அணை நீர்மட்டம் 16.43 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 109 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் நீர்மட்டம் 16.53 அடியாகும். அணைக்கு 13 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 7.90 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும் நீர்மட்டம் உள்ளது. ம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 9.3 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : TALKAPARA DAM ,NAGARGO ,RAINFALL ,LYORA AREAS ,Nnyakumari district ,Talkhipara Dam ,Dinakaran ,
× RELATED பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன்பு தீ குளித்த வாலிபர் பலி