×

புயல், மழையால் பாதித்த 4 மாவட்டங்களிலும் தேவைப்படுவோருக்கு வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகம் : அமைச்சர் சக்கரபாணி

சென்னை : புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 820 பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்-கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டு, பங்க் மூடப்பட்டது. சில பெட்ரோல் பங்க்-கள் திறந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்காததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பங்க்-களில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் சென்னையிலுள்ள குரோம்பேட்டை, நாகல்கேனி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி.பி.சி.எல். சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசல் அளவின் இருப்பை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகிகள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “வெள்ள பாதிப்பிற்குள்ளான இடங்களில் 39 பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே இயங்கவில்லை.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே சென்று சிலிண்டர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் தட்டுப்பாடின்றி வழங்க ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். புயல், மழையால் பாதித்த 4 மாவட்டங்களிலும் தேவைப்படுவோருக்கு வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. 6,000 கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களில் வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post புயல், மழையால் பாதித்த 4 மாவட்டங்களிலும் தேவைப்படுவோருக்கு வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகம் : அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakarapani ,Chennai ,Mikjam ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...