×

மிக்ஜாம் புயல் பாதிப்பு: பச்சமுத்து கல்வி நிறுவனத்தார் 50 டன் அரிசி உதவி..!!

தருமபுரி: தருமபுரியிலுள்ள பச்சமுத்து கல்வி நிறுவனத்தார் 50 டன் அரிசியை சென்னைக்கு நிவாரணமாக அனுப்பிவைக்க உள்ளனர். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்கோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தருமபுரியிலுள்ள பச்சமுத்து கல்வி நிறுவனத்தார் 50 டன் அரிசியை சென்னைக்கு நிவாரணமாக அனுப்பிவைக்க உள்ளனர்.தமிழ்நாடு அரசு மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 டன் அரிசி சென்று சேர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று 10 டன் அரிசியும், இன்று 10 டன் அரிசியும் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 டன் அரிசி நாளை மற்றும் நாளை மறுநாள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: பச்சமுத்து கல்வி நிறுவனத்தார் 50 டன் அரிசி உதவி..!! appeared first on Dinakaran.

Tags : Pachamuthu Educational Institutions ,Dharmapuri ,Bachamuthu Educational Institute ,Chennai ,Bay of Bengal ,Pachamuthu Educational Institute ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...