×

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் இலவசம் : முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டம்!!

சென்னை : தமிழ்நாட்டில் ‘இன்னுயிர் காப்போம் ‘ என்ற புதிய திட்டத்தை சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைகளை போர்க்கால அடிப்படையில் தீர்த்தல், தொலை நோக்கு திட்டங்களுடன் விபத்துகளை தடுத்தல் உள்ளிட்டவைகளுக்காக சாலை பாதுகாப்பு ஆணையம் அமைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர திட்டத்திற்கான அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சையை ‘நம்மை காக்கும் 48 மணி நேரம்’ என்ற திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்க உள்ளது. இதற்காக சாலையோர தனியார் மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகள் என 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன.இதற்காக முதற்கட்டமாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ள அரசு, நபர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் வரம்பிற்குள் 81 விதமான மருத்துவ முறைகளை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவரும் பயன்பெறும் இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டத்தை இயற்ற அரசு திட்டமிட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பயிற்சிகள், விழிப்புணர்வு வழங்கும் வரை இன்னுயிர் காப்போம் – உதவி செய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சீரான சாலைகள், நம்மை காக்கும் 48 மணி நேரம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், உதவி செய் ஆகியவைகளை ‘இன்னுயிர் காப்போம் ‘ என்ற புதிய திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. …

The post சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் இலவசம் : முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : CM ,Chennai ,Tamil Nadu ,Innuir ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 14...