×

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை


மதுராந்தகம்: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மதுராந்தகம் தெற்கு பைபாஸ் சாலை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாநில துணை பொது செயலாளர் எழில் கரோலின் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் கிட்டு பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கதிர்வாணன், தயாநிதி, சமத்துவம், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், பேரறிவாளன், அன்புச்செல்வன், அப்பாதுரை உள்ளிட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், அதிமுக சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகர செயலாளர் சரவணன் ஆகியோர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் சீனிவாசன், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், கருங்குழி பேரூர் செயலாளர் ஜெயராஜ், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chengalpattu West District Visakhapatnam ,Madhurandakam ,Chengalpattu West District Liberation Tigers Party ,Madhurandakam South ,Chengalpattu West District ,Vishika ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்...