×

வேளச்சேரி, பள்ளிக்கரணையில் ₹50 லட்சம் நிவாரண பொருட்கள்: வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ வழங்கினார்


சென்னை: மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்க முடியத நிலையில் இருந்து வருகின்றனர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 6,000 பாக்கெட் பால், 40 ஆயிரம் பாட்டல் தண்ணீர், 15 ஆயிரம் பிரட், 30 ஆயிரம் பிஸ்கட், 2000 மெழுகுவர்த்தி, 2000 தீப்பெட்டி, 4 டன் பழங்கள், 1000 போர்வைகள்,

1000 கிலோ பால் பவுடர், 5 டன் அரிசி ஆகியவற்றை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ, 7 கனரக வாகனங்களில் நேற்று சென்னைக்கு கொண்டு சென்று வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் தெரு வாரியாக சென்று வீடு வீடாக பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மாவட்ட பிரதிநிதி பெருமாள், துணை செயலாளர்கள் காமராஜ், அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் முரளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post வேளச்சேரி, பள்ளிக்கரணையில் ₹50 லட்சம் நிவாரண பொருட்கள்: வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Velachery ,Vasantham Karthikeyan ,Chennai ,Cyclone Mikjam ,Vasantham Karthikeyan MLA ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...