×

புயல், வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முழு வீச்சுடன் பணிகள் நடைபெற்று வருகிறது: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் அதிக மழைநீர் தேங்கிருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வழக்கறிஞர் ஞானபானு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முறையீடு செய்தார். அவர் கூறும்போது, எல்லா மழைக்கும் எங்கள் பகுதி மிகவும் பாதிக்கப்படுகிறது. நிரந்தர தீர்வு கிடைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு அரசு பிளீடர் பி.முத்துக்குமார், புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதையடுத்து 4 நாட்கள் முன்பே போர்க்கால நடவடிக்கையாக அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது. நிவாரணம் மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் துரித நடவடிக்கையாக அரசு செய்து வருகிறது. 14 அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். அரசு தரப்பின் இந்த தகவலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரர் ஏதாவது குறை இருந்தால் அரசிடம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

முன்னதாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் ஆஜராகி, ஏற்கனவே, மழை நிவாரணம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தற்போதுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ஜனவரி மாதம் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

The post புயல், வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முழு வீச்சுடன் பணிகள் நடைபெற்று வருகிறது: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Advocate ,Gnanabanu ,Chief Justice ,Republic of Chennai ,Pulianthopu ,Dinakaran ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...