×

தொழிலதிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சுருளிராஜன்(46). இவர் ரியல் எஸ்டேட், கான்ட்ராக்ட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை காரில் பாளையங்கோட்டை சட்டக்கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் அவர் கார் மீது வேகமாக மோதியது. உடனே கீழே இறங்கிய சுருளிராஜனை பைக்குகளில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே ரத்தவெள்ளத்தில் விழுந்து இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலதிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Surulirajan ,Manapatveedu South Street ,Balayangottai ,Nellai district ,Dinakaran ,
× RELATED நெல்லை – நாகர்கோவில் இடையே விபத்தில்...