×

‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர் குழு தொண்டு நிறுவனங்கள் ஈடுபடலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்கும் பணிகளில் தன்னார்வலர் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளை சார்ந்த குழுவினர் இந்த பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள், அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கீழ்க்காணும் அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பி, பதிவு செய்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர் குழு தொண்டு நிறுவனங்கள் ஈடுபடலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chief MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Chief MLA K. Stalin ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு...