×

டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமனம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த பதவி நியமனத்தில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

இதனால் தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் அவரை திடீரென பணியிடமாற்றம் செய்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். தற்போது அவர் வணிகவரித்துறை இணை ஆணையராக செயல்பட்டு வருகிறார்.

உமா மகேஸ்வரிக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், புதிய செயலாளரை நியமனம் செய்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி செயலாளராக குடிமைப் பணி அலுவலர் கோபால் சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Gopal Sundararaj ,TNPSC ,Chennai ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி...