×

போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனர்: பாஜ மீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: தேர்தலுக்கு முன் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் நாட்டின் மிக பெரிய பிக்பாக்கெட் கட்சி பாஜ தான் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,‘‘ நாட்டின் மிக பெரிய பிக்பாக்கெட் பாஜ ஆகும்.ஏனென்றால் பெரும்பாலான மக்கள் அந்த கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது என வாக்குறுதி, பண மதிப்பிழப்பு,பெருந்தொற்றின் போது திடீரென ரேஷன் அரிசி விநியோகம் நிறுத்தப்பட்டது ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்தனர். தேர்தலுக்கு முன்னர் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனர். உபியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அந்த மாநிலத்துக்கு நிதி உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக 3 முறை பிரதமரை சந்தித்து பேசியுள்ளேன். மீண்டும் அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்’’ என்றார்.

The post போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனர்: பாஜ மீது மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mamta ,Baja ,KOLKATA ,
× RELATED நான் மேற்குவங்க மாநிலத்தின் ஏக்நாத்...