×

மிக்ஜாம் புயல் பாதிப்பு: மழை, வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.. ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்..!!

சென்னை: மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. புளியந்தோப்பு பகுதியில் அதிக மழை நீர் தேங்கியுள்ளது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானபானு ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து 4 நாட்கள் முன்பே அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்தது என்று அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.

அதில், மக்கள் பாதிக்கப்பட்டால் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு
தமிழ்நாடு அரசு செய்தது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள 14 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைககளும் எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் துரித நடவடிக்கையாக அரசு செய்து வருகிறது. ஆவின் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களை சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: மழை, வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.. ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,TAMIL NADU ,Chennai ,Government of Tamil Nadu ,ICOURT ,
× RELATED மிக்ஜாம் புயலில் சேதம் 8 புதிய வீடுகள்...