×

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வாலிபரிடம் ரூ.14.18 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியை சேர்ந்த 41 வயது நபரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. அதில் டெலிகிராம் சேனல் மற்றும் கூகுள் ரிவ்யூ ஆகியவற்றில் சேர்ந்து ரிவ்யூ கொடுத்து வந்தால், பணம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த நபர், கூகுள் ரிவ்யூ செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு ரிவியூக்கு ரூ.50 கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கிரிப்டோ டிரேடிங் டாஸ்க் மேற்கொண்டு பணம் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என மோசடி கும்பல் 41 வயது நபரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அந்த நபர் கிரிப்டோ டிரேடிங்கில் புதிதாக கணக்கு துவங்கி, ஆன்லைன் மூலம் பல தவணைகளாக மொத்தம் ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 440ஐ அனுப்பியுள்ளார். பின் சம்பந்தப்பட்டவர்களை அந்த நபர் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் நேற்று நீலகிரி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வாலிபரிடம் ரூ.14.18 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ooty ,WhatsApp ,Theetukkal ,Nilgiris district ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...