×

திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வுகள் நடைபெறும்: 2 தேர்வுகள் மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு


சென்னை: அனைத்து அரசு மற்றும் உதவி பெறுகளில் நானை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர் காஞ்சிரம். செங்கல்பட்டு வட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும்

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனிதனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது

தொடர் மழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 07.12.23 மற்றும் 08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.23 மற்றும் 20.12.23 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

The post திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வுகள் நடைபெறும்: 2 தேர்வுகள் மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nana ,of ,Education ,Dinakaran ,
× RELATED சட்டமேலவைத் தேர்தலில் கட்சி மாறி...