×

அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்;அவரது நினைவு நாளில் உறுதியேற்போம்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு

சென்னை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர். உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்! அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்.

உதயநிதி ஸ்டாலின்

சாதியின் ஆணிவேரை நோக்கிப் போர் தொடுத்தப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதியோடு சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மகத்தான அரசியல் சட்டத்தை பல இன்னல்களுக்கு இடையே உருவாக்கி, சாமானிய மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியேற்றிய சட்ட மாமேதை. அண்ணல் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து – நாட்டிலேயே முதல்முறையாக அவர் பெயரில் கல்லூரி – சட்டப்பல்கலைக்கழகத்தை தொடங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர்களின் வழி வந்த நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தார்கள். அம்பேத்கர் அவர்களின் நினைவினைப் போற்றும் இந்நாளில் அவர் நமக்கு உருவாக்கித் தந்த அரசியலமைப்பு சட்டத்தை பாசிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாக்க உறுதியேற்போம்.

The post அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்;அவரது நினைவு நாளில் உறுதியேற்போம்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chief Minister ,Stalin ,Chennai ,CM ,
× RELATED ஜாதி, மத பாகுபாடுகளை கடந்து...