×

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு, தண்ணீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் துரைமுருகன்..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக பெய்த கனமழையால் சென்னை மழைநீரால் மூழ்கியது. இதில் ஏரிகள் பல நிரம்பின. சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி 2015-ம் ஆண்டிற்கு பிறகு 23 அடியை எட்டியது. இதேபோன்று புழல், பூண்டி ஏரிகளிலும் நீா் வரத்து அதிகரித்து வருவதால் அதற்கேற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவும் உயா்த்தப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் இன்று காலை 4,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். செம்பரம்பாக்கத்தில் உபரிநீர் திறப்பு, நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது; செம்பரம்பாக்கம் 2,500 கனஅடி நீர், பூண்டி ஏரியிலிருந்து 8,000 கனஅடி நீர், புழல் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர், சோழவரம் ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படுகிறது. என்று அவர் தெரிவித்தார்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு, தண்ணீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் துரைமுருகன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Sembarambakkam lake ,CHENNAI ,Water Resources ,Dinakaran ,
× RELATED டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை...