×

டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்: டிடிவி தினகரன்

சென்னை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரை இன்று பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் டிடிவி தினகரன், இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எழுத்து வடிவம் தந்தவருமான பாரத ரத்னா டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.

கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, சமூகநீதிப் போராளியாக, புரட்சியின் சின்னமாக இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்” டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

The post டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Ambedkar ,TTV Dhinakaran ,CHENNAI ,TTV Dinakaran ,Dinakaran ,
× RELATED நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும்...