×

தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர்: கமல்ஹாசன் பதிவு

சென்னை: சமத்துவப் பாதையில் பயணிப்பவர்களின் கைவிளக்காக ஒளிரும் பெருந்தகையாளரை மனதில் இருத்துவோம் என டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் குறித்து நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பதைப் பொறுத்துக்கொள்ளாத புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. பொருளாதார மேதை, சட்ட வல்லுநர், சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட அம்பேத்கர், ‘கல்வியே விடுதலை’ என்பதைக் காட்டித் தந்தவர்.

கடினமான சூழல்களிலிருந்து மேலெழுந்து சாதிக்க முடியுமென்பதன் அடையாளமாக தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர். சமத்துவப் பாதையில் பயணிப்பவர்களின் கைவிளக்காக ஒளிரும் பெருந்தகையாளரை மனதில் இருத்துவோம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர்: கமல்ஹாசன் பதிவு appeared first on Dinakaran.

Tags : Annal Ambedkar ,Kamal Haasan ,Chennai ,Dr. ,Ambedkar ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களைத் தமிழ்...