×

7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு இன்று கடலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர். புயல் மற்றும் சூறைக்காற்று காரணமாக மீன்வளத்துறை எச்சரிக்கையால் நவ.30 முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகையில் 8 நாட்களுக்குப் பிறகு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

The post 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,Rameswaram ,Pampan ,Mandapam ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்