×

சென்னையில் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கம்!

சென்னை: “சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடையும். இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் இடையே மற்றும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Beach ,Tambaram ,Chengalpattu ,Egmore ,
× RELATED மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்...