×

ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி தலைமையில் மலர்தூவி மரியாதை


சென்னை: ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெரினா கடற்கரை அருகே அவரது சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 7ம் ஆண்டு நினைவு நாளான நேற்று (செவ்வாய்) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.பா.கிருஷ்ணன் மற்றும் பலருடன் ஜெயலலிதா சமாதிக்கு ஊர்வலமாக வந்து மலர்அஞ்சலி செலுத்தினார். அவர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து, டி.டி.வி.தினகரனும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

The post ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி தலைமையில் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Anniversary Commemoration Day ,Edappadi ,Chennai ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Marina beach ,
× RELATED தமிழகத்தின் நீராதார உரிமைகளை...