×

கூட்டணியிலிருந்து அதிமுக சென்றது ஏன்?: நயினார் நாகேந்திரன் புது குண்டு

நெல்லை: நெல்லை தச்சநல்லூரில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திட்டமிட்ட நடவடிக்கையாக கருதுகிறேன்.

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்ததில் எவ்வித தவறும் இல்லை. தேர்தல் கால கருத்து கணிப்புகள் எடுபடாது என்பதை நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது நிரூபித்து காட்டுகிறது.

பாஜ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்து பேச பாராளுமன்ற தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யும். தமிழகத்தில் பாஜ கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது நாங்கள் கூட்டணியில் இல்லை என்று சொல்வதற்கு காரணம் நாங்கள் அவர்களை அழைத்து பேச வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூட்டணியிலிருந்து அதிமுக சென்றது ஏன்?: நயினார் நாகேந்திரன் புது குண்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nayanar Nagendran ,Nellai ,Nellai Thachanallur ,MLA ,Dinakaran ,
× RELATED கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த குழு அமைத்தது பாஜக..!!