×

அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிளாக் நம்பர் 12 கட்டிடத்தில் பயாலஜி ஆராய்ச்சி கூடம் இயங்கி வருகிறது. இரண்டாவது தளத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி கூடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு 24 மணி நேரமும் இயங்க கூடிய இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

The post அரசு மருத்துவமனையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,number ,Rajiv Gandhi Government General ,Hospital ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி