×

திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: தஞ்சை வீட்டிலும் சோதனை

திருச்சி: திருச்சி குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பியின் திருச்சி மற்றும் தஞ்சை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.திருச்சி குற்றப்பிரிவு போலீசில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் முத்தரசு(54). கடந்த ஆண்டு திருவெறும்பூர் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி பணி மாறுதல் பெற்று தற்போது குற்றப்பிரிவில் உள்ளார். இவரது வீடு ஏர்போர்ட் அருகே மொராய் சிட்டியில் உள்ளது.

மேலும் தஞ்சை ஆர்எம்எஸ் காலனியிலும் இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது.இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக உத்தரவின் பேரில், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்ெபக்டர் விஜயலெட்சுமி ஆகியோர் தலைமையிலான 6க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 7 மணிக்கு மொராய் சிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் கதவுகளை மூடிவிட்டு உள்ளே சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.இதேபோல் தஞ்சை ஆர்எம்எஸ் காலனியில் உள்ள டிஎஸ்பி முத்தரசுவின் வீட்டிலும் 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இங்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திருச்சி வீட்டில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. டிஎஸ்பி வீடுகளில் விஜிலென்ஸ் நடத்திய ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: தஞ்சை வீட்டிலும் சோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy Crime Branch ,Tanjore house ,Trichy ,Tanjore ,Trichy… ,Trichy Crime ,Branch ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து