×

சென்னை புறநகர் ரயில் சேவை நாளையும்(06-12-2023) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவை நாளையும்(06-12-2023) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் அரக்கோணம் மின்சார ரயில்கள் அனைத்தும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் பெங்களூரு மெயில், சென்னை சென்ட்ரல்- மங்களூரு ரயில்களும், காரைக்கால்-சென்னை ரயில், மன்னார்குடி- சென்னை மன்னை விரைவு ரயில் சேவையும், ராமேஸ்வரம்- சென்னை விரைவு ரயிலும், நாளை (டிச.6) காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் புறப்பட வேண்டிய ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post சென்னை புறநகர் ரயில் சேவை நாளையும்(06-12-2023) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai Suburban Rail Service Day ,Chennai ,CHENGALPATTU ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...