×

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் அமைச்சர் ம.சுப்பிரமணியன்ஆய்வு..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் அமைச்சர் ம.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரத் தொடங்கியது.

இன்று பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே பபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 162 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கு மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 1000க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் உணவு வழங்கினார். பின்னர் நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையில் வழக்கத்தை விட 12 மடங்கு அதிகமாக தற்போது மழை பெய்துள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்து போக்குவரத்து சகஜமாகி விட்டது. தேங்கியுள்ள மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

The post சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் அமைச்சர் ம.சுப்பிரமணியன்ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Saidapet, Chennai ,Chennai ,Saitappettai, Chennai ,Bay of Bengal ,
× RELATED டைடல் பார்க், தகவல் தொழில்நுட்பம்...