×

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை போலீஸ் கமிஷனர் ரத்தோர் படகில் சென்று ஆய்வு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக அண்ணாசாலை, எழும்பூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் படகு மூலம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகள் கேட்டு உணவு பொருட்கள் வழங்கினார். சென்னை மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் போலீசார் செய்து வரும் பணிகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று இரவு சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் சாலை, உடுப்பி சிக்னல், ருக்மணி லஷ்மிபதி சாலை, கண் மருத்துவமனை மற்றும் அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

பேரிடர் மீட்பு குழுவினர்களுடன் மழை வெள்ளம் பாதித்தத பகுதிகளான திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ரப்பர் படகில் சென்று, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான பிரட், வாழைப்பழம், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், ரொட்டி, உணவு பொருட்களை கொட்டும் மழையில் மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை போலீஸ் கமிஷனர் ரத்தோர் படகில் சென்று ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Rathore ,Chennai ,Sandeep Roy Rathore ,Annasalai ,Egmore ,Mikjam ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...