×

மழை நின்று 3 மணி நேரத்தில் வெள்ளம் வடிந்துவிடும்

சென்னை: அடையார் முகத்துவாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாலைகளில் தேங்கிய நீர் மழை நின்ற 3 மணி நேரத்தில் வடிந்துவிடும். அது வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கு தங்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. செம்பரபாக்கம் ஏரி திறந்தால் வழக்கமாக சைதாப்பேட்டை கரையோர மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் ஆனால் தற்போது அடையார் அகலப்படுத்தியதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

The post மழை நின்று 3 மணி நேரத்தில் வெள்ளம் வடிந்துவிடும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,M. Subramanian ,Adyar estuary ,
× RELATED புற்றுநோயை உண்டாக்கும்...