×

இந்த பெட்டி இருந்தா அதிர்ஷ்டம் கதவை தட்டும் மந்திர பெட்டி என கூறி ₹3.5 கோடி மோசடி: நாகலாந்து பெண்ணை ஏமாற்றிய பாதிரியார் கைது

திமாபூர்: மேற்குவங்கத்தில் அதிர்ஷ்டம் தரும் பெட்டி என கூறி பெண்ணிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கின் கான்டிபிட்டாவில் உள்ள நியூ லைஃப் சர்ச்சில் ரெவரெண்ட் திமோதி ஜோஷி பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது கூட்டாளிகள் சிலரும் நாகலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் அதிர்ஷ்டம் தரும் ஒரு மந்திர பெட்டியை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

அதை நம்பிய அந்த பெண்ணும் கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் பாதிரியார் திமோதி ஜோஷி கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.3.5 கோடி வரை பணம் டெபாசிட் செய்துள்ளார். இதையடுத்து பாதிரியார் சாதாரண வெற்று பெட்டி ஒன்றை பெண்ணிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திமோதி ஜோஷியை திமாபூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள், “கைது செய்யப்பட்டுள்ள பாதிரியாரும், அவரது சகோதரரும் சேர்ந்து சர்ச்சுக்கு வரும் வடமாநிலங்களை சேர்ந்த பலரிடமும் பல்வேறு வகையான மோசடிகளை செய்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

The post இந்த பெட்டி இருந்தா அதிர்ஷ்டம் கதவை தட்டும் மந்திர பெட்டி என கூறி ₹3.5 கோடி மோசடி: நாகலாந்து பெண்ணை ஏமாற்றிய பாதிரியார் கைது appeared first on Dinakaran.

Tags : Nagaland ,Timapur ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...