×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள முதல்வர் உத்தரவின்படி தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அமைச்சர் ரகுபதி நேற்று நாகபட்டினம் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 15 வகையான உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவசரகால பேரிடர் மையத்தை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 829 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இது சராசரி மழை அவை விட கூடுதல் ஆகும்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61 ஆயிரம்...