×

கீழ்வேளூர் அருகே உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிப்பு

கீழ்வேளூர்: உலக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தினம் திருக்குவளை சமத்துவபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர் திருமலைகுமார் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் முத்தையன் கொடியேற்றி வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் அன்பழகன், ஒன்றிய தலைவர் முருகையன், சிபிஎம். ஒன்றியக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கீழ்வேளூர் அருகே உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : World Day of Persons with Disabilities ,Kilvellur ,International Day of Disabled Persons ,Thirukkuvala Samatthupuram ,International Day of Persons with Disabilities ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...